2010-05-07 16:14:01

மே 08 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருநாள் அறிஞர் அண்ணா ஏதோ வேலையாக கீழ் அறையில் இருந்தார். அப்போது பெரியார் மேல்மாடி அறையில் அமர்ந்து கொண்டு அண்ணா எழுதிய எதையோ வாசித்துக் கொண்டிருந்தாராம். அவர் எழுதிய கருத்தை ஊன்றி வாசித்த பெரியார் அதனால் ஈர்க்கப்பட்டவராய் உடனே கீழே இறங்கி வந்து அவரைப் பாராட்டினாராம். அண்ணா அவரிடம், ஏன் இந்த அவசரம்!. தாங்கள் கீழே வரும்போது மெதுவாகச் சொன்னால் போதுமே, இதற்காக அவசரமாகக் கீழே இறங்க வேண்டுமா? என்று கேட்டாராம். அதற்கு பெரியார், பாராட்ட நினைத்தால் உடனடியாகப் பாராட்ட வேண்டும் என்றாராம். மாவீரன் நெப்போலியனின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் அவனது பாராட்டும் குணம் என்கிறார்கள். சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பதக்கங்கள் கொடுப்பது அவனது வழக்கமாம். பாராட்டு நான்குவழிச் சாலை போன்றது. இதில் பாராட்டுபவர்களும் பாராட்டப்படுபவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்மைகளை அடைகிறார்கள். வளரவும் செய்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.