2010-05-07 16:22:54

தாய்லாந்து பிரதமரின் ஐந்து கொள்கைத் திட்டத்திற்கு கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் ஆதரவு


மே07,2010 தாய்லாந்து நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் வருகிற நவம்பர் 14ம் தேதி பொதுத் தேர்தலை நடத்தவும் அந்நாட்டு பிரதமர் Abhisit Vejjajiva ன் ஐந்து கொள்கைத் திட்டத்திற்கு தாய்லாந்து கத்தோலிக்க ஆயர்களும் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்களும் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஐந்து கொள்கைத் திட்டத்தைத் தான் வரவேற்பதாகத் தெரிவித்த தாய்லாந்து ஆயர் பேரவையின் சமூகவிவகார ஆணையத் தலைவர் ஆயர் Banchong Chaiyara, இது செயல்படுத்தப்பட்டால் நாட்டின் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என்று கூறினார்.

இந்தத் திட்டம் ஒரு நல்ல நேர்நிலையான முயற்சி என்று பாராட்டியிருப்பதோடு அனைத்துத் தரப்பினரும் நாட்டிற்கு நன்மையானது எதுவென்பது குறித்து நோக்க வேண்டும் என்றும் ஆயர் கூறினார்.

தாய்லாந்தின் தற்போதைய அரசை எதிர்த்து ஏறத்தாழ இரண்டு மாதங்களாக போராட்டங்களும் நெருக்கடி நிலைகளும் காணப்பட்டதையடுத்து அந்நாட்டின் பிரதமர் Abhisit, இவ்வாரத் தொடக்கத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்தார். இந்த வன்முறைப் போராட்டங்களில் 27 பேர் இறந்தனர் மற்றும் 900 த்துக்கு அதிகமானோர் காயமடைந்தனர்.








All the contents on this site are copyrighted ©.