2010-05-07 16:23:44

சர்வதேச பெண் துறவற சபைகளின் அதிபர்களின் கூட்டம்


மே07,2010 சர்வதேச பெண் துறவற சபைகளின் அதிபர்களின் ஐந்து நாள் கூட்டம் இவ்வெள்ளிக்கிழமை உரோமையில் தொடங்கியுள்ளது.

இரவானாலும் வற்றாது நீர் வரும் ஊற்றை நான் நன்றாகவே அறிந்துள்ளேன் என்ற புனித திருச்சிலுவை அருளப்பரின் வார்த்தைகளை கருப்பொருளாக வைத்து தொடங்கியுள்ள இச்சர்வதேச கூட்டத்தில் 75 நாடுகளின் ஏறக்குறைய 1000 அருட்சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.

இன்றைய உலகில் பெண் துறவிகள் எதிர்நோக்கும் சவால்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவிருப்பதாக UISG என்ற இந்தச் சர்வதேச பெண் துறவற சபைகளின் அதிபர்கள் கழகத் தலைவர் அருட்சகோதரி Maureen Cusick கூறினார்.

திருப்பீடத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தக் கழகத்தில், 7 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட அருட்சகோதரிகளைக் குறித்து நிற்கும் சுமார் 1900 பெண் துறவு சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.








All the contents on this site are copyrighted ©.