2010-05-07 16:17:36

உலகில் அணுஆயுதக் களைவுக்குத் திருப்பீடம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கின்றது- பேராயர் மிலியோரே


மே07,2010 உலக அளவில் அணுப்பரிசோதனையைத் தடை செய்வது உலகில் அணுஆயுதங்களின் அதிகரிப்பைத் தடை செய்யும், இன்னும், அது அணுஆயுதங்கள் தடை செய்யப்படுவதற்கும், அவை பரவாமல் இருப்பதற்கும் சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படையாமல் இருப்பதற்கும் உதவும் என்று பேராயர் செலஸ்தினோ மிலியோரே கூறினார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும், அணுஆயுதப்பரவல் தடை குறித்த பரிசீலனை மாநாட்டில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே இவ்வாறு தெரிவித்தார்.

உலகளாவிய அணுஆயுதக் களைவுக்குத் திருப்பீடம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர் மிலியோரே, இந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அணுஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.