2010-05-06 16:42:59

சந்தேகக் குற்றவாளிகள் உடலில் பலவந்தமாக மருந்துகளை ஏற்றி விசாரிப்பதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதை கேரள திருச்சபை அதிகாரி ஒருவர். வரவேற்றுள்ளனர்


மே06,2010 சந்தேகக் குற்றவாளிகளை விசாரிக்கும் போது, அவர்களின் இசைவைப் பெறாமல், அவர்களின் உடலில் பலவந்தமாக மருந்துகளை ஏற்றி விசாரிப்பதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்றுள்ளனர் கேரள திருச்சபை அதிகாரி ஒருவர்.

கேரளாவில் 18க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற ஓர் அருட்சகோதரியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட இரு குருக்களையும் ஓர் அருட்சகோதரியையும் விசாரிப்பதற்கு 2008ம் ஆண்டில் காவல்துறை நார்கோ அனாலிஸிஸ் (narco-analysis) என்று கூறப்படும் "உண்மையை வெளிக்கொணரும் மருந்துகளை" ஏற்றி விசாரித்தது குறித்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர் தலத்திருச்சபை நடவடிக்கையாளர்கள்.

உண்மைகளைக் கண்டறிவதற்காக, விசாரணைகளின் போது, அந்த நபர்களின் இசைவின்றி, நார்கோ அனாலிஸிஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராஃப் (narco-analysis, polygraph and brain mapping) போன்ற இரசாயனங்களைப் பயன்படுத்துதல், தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவதாக இருக்கின்றது மற்றும் இத்தகைய முறைகள் அரசியல் சட்டத்திற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் இப்புதனன்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, மனித மதிப்பீடுகளைத் தாங்கி பிடித்துள்ளது மற்றும் குற்றமற்றவர்களைக் காப்பாற்றியுள்ளது என்று கேரள சீரோ மலபார் ரீதி திருச்சபையின் பேச்சாளர் அருட்திரு Paul Thelakat பாராட்டியுள்ளார்.

அதே சமயம், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து அப்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை மேலதிக விசாரணைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

உடலில் மருந்தைச் செலுத்தி ஒருவரை தன்னிலை மறக்கச் செய்து உண்மைகளை வெளிக்கொணரும் முறை நார்கோ அனாலிஸிஸ் ஆகும். விசாரிக்கப்படுபவரின் மூளைச் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர் கூறும் விடயங்களின் உண்மைத் தன்மையை நிர்ணயிப்பது பிரைன் மேப்பிங் ஆகும். உடற்கூறு செயல்பாடுகளின் அடிப்படையில் ஒருவர் பேசுவது உண்மையா என்று கண்டறியும் முறை பாலிகிராஃப் ஆகும்.








All the contents on this site are copyrighted ©.