2010-05-06 16:36:48

குவைத் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


மே06,2010 குவைத் நாட்டுக்கும் திருப்பீடத்துக்குமிடையே அரசியல் உறவு ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக குவைத் அரசுத் தலைவர் Sheikh Sabah Al Ahmad Al Jaber Al Sabah வை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாப்பிறையின் நூலகத்தில் ஏறக்குறைய 25 நிமிடங்கள் திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், சுமார் 200 வருட பழமையான கையெழுத்து பிரதி ஒன்றையும் இரண்டு மிகநேர்த்தியான கம்பளங்களையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார் குவைத் அரசுத் தலைவர் Sheikh Al Sabah.

இந்த சந்திப்பு மிகவும் இனிதான சூழலில் இடம் பெற்றதாகக் கூறிய திருப்பீட பத்தரிகை அலுவலகம், இதில், பொதுவான விவகாரங்கள், குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஊக்குவித்தல், பல்சமய உரையாடல், குவைத்திலுள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயம் நாட்டிற்குச் செய்துவரும் நன்மைகள் போன்றவை இடம் பெற்றதாக அறிவித்தது.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் குவைத் அரசுத் தலைவர் Sheikh Al Sabah.








All the contents on this site are copyrighted ©.