2010-05-05 17:36:11

மே06 வரலாற்றில் இன்று


1527 - ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடின. 147 சுவிஸ் படை வீரர்கள் திருத்தந்தை 7ம் கிளமென்டைப் பாதுகாப்பதற்காக புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்லஸ்க்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.

1536 அரசன் 8ம் ஹென்ரி ஆங்கில மொழி விவிலியங்கள் ஒவ்வோர் ஆலயத்திலும் வைக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிட்டான்.

1542 – புனித பிரான்சிஸ் சேவியர் அக்காலத்திய போர்த்துக்கீசியரின் தலைநகரான கோவாவை அடைந்தார்.

1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே Mangal Pandey என்ற படைவீரர் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.

1889 - ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

1962 புனித மார்ட்டின் டி போரஸ் திருத்தந்தை 23ம் அருளப்பரால் புனிதராக உயர்த்தப்பட்டார்

2001 திருத்தந்தை 2ம் ஜான் பால் சிரியாவுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தில் மசூதிக்குச் சென்ற முதல் பாப்பிறை என்ற பெயர் பெற்றார்








All the contents on this site are copyrighted ©.