2010-05-05 17:39:59

திருமணம், திருமணத் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், முழு சமுதாயத்துக்கும் மீட்பின் கருவியாக இருக்கின்றது, திருத்தந்தை


மே05,2010 இம்மாதத்தில், சுவீடன் நாட்டின் Jönköping ல் இடம்பெறவிருக்கின்ற குடும்பம் பற்றிய மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பவர்களுக்குத் தமது இனிய வாழ்த்துக்களையும் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை,.

RealAudioMP3 கடவுள் நமக்குக் கொடையாக வழங்கியுள்ள திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு, தந்தை மகன் தூயஆவி ஆகிய மூவொரு கடவுளின் கரையற்ற அன்பை அனுபவிக்க உதவுகின்றன. கடவுளின் சாயலாக படைக்கப்படுள்ள மனிதர் இந்த அன்பிற்கு உரியவர்கள். இதேபோல் அன்புகூரப்படவும் வேண்டியவர்கள். கடவுளின் அன்பு மட்டுமே நமது உள்ளார்ந்த தேவைகளை நிறைவு செய்ய முடியும். எனினும், கணவனுக்கும் மனைவிக்குமிடையேயான அன்பு வழியாக, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பு வழியாக, நாம் ஒருவர் ஒருவருடன் காட்டும் அன்பு வழியாக வரவிருக்கும் வாழ்வில் நாம் சுவைக்கவிருக்கும் எல்லையற்ற அன்பு வழங்கப்படுகிறது. திருமணம், திருமணத் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், முழு சமுதாயத்துக்கும் மீட்பின் கருவியாக இருக்கின்றது. எனினும், இது, பிறரின் நலனுக்காக நமது சுய இன்பங்களைத் தியாகம் செய்யவும் நமக்குச் சவாலாக இருக்கின்றது. அது அவ்வாறு வாழ நம்மை வலியுறுத்துகின்றது. திருமணத்திற்கு, சகிப்புத்தன்மையும் மன்னிப்பும் தேவைப்படுகின்றது. புதிய வாழ்வைப் பேணிப் பாதுகாக்க இது நம்மை அழைக்கிறது. நல்லக் குடும்ப சூழலில் வாழ்வதற்கு வாய்ப்புப் பெற்றவர்கள், நல்ல பண்புகளோடும் வாழ்வதற்கான முதலும் அடிப்படையுமான பள்ளியைக் கண்டுணர்ந்துள்ளார்கள். திருமணமு குடும்ப வாழ்வும் மனித சமுதாயத்திற்கு வழங்கும் அளப்பரிய நன்மைகளைச் சரியான வித்ததில் புரிந்து கொண்டு அவற்றை வளர்ப்பதற்கு இந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் எல்லாரும் முயற்சிக்குமாறு அவர்களைத் தான் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.