2010-05-05 17:52:59

ஐந்து திருத்தந்தையர்களுக்குப் பணியாற்றியிருக்கிற கர்தினால் போஜ்ஜி இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல் செய்தி


மே05,2010 இச்செவ்வாயன்று இறைபதம் அடைந்த இத்தாலிய கர்தினால் Luigi Poggi, நீண்ட காலம் வத்திக்கானுக்கு, குறிப்பாக திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ளதைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இக்கர்தினாலின் சகோதரர் மற்றும் சகோதரிக்குத் திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வத்திக்கான் நூலகம், வத்திக்கானின் இரகசிய ஆவணங்கள் ஆகியவற்றின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

92 வயதாகும் கர்தினால் போஜ்ஜி, 1945ம் ஆண்டு முதல் அவர் பணி ஓய்வு பெற்ற 1998ம் ஆண்டு வரை வத்திக்கானில் ஐந்து திருத்தந்தையர்களுக்குப் பணியாற்றியவர். இவரின் அடக்கச் சடங்கு வத்திக்கான் பசிலிக்காவில் இவ்வெள்ளிக்கிழமை இடம் பெறும்.

கர்தினால் போஜ்ஜியின் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 179 ஆகியது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 108 ஆகும்







All the contents on this site are copyrighted ©.