2010-05-05 17:58:23

ஆசியாவின் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவம் அருணாச்சல மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது


மே05,2010 அருணாச்சல மாநிலத்தின் Changlang மாவட்டத்தில், ஆசியாவின் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவமும், அம்மாநிலத்தின் முதல் கத்தோலிக்கப் பேராலயமும் திறக்கப்பட்டுள்ளது.

இப்பிரமாண்டமான இயேசுவின் திருவுருவத்தை அருணாச்சல மாநிலத்தின் நிதியமைச்சர் Setong Sena திறந்து வைத்தார். கொல்கட்டாவில் செய்யப்பட்ட இந்தத் திருவுருவம், 12 மீட்டருக்கு மேலான உயரம் கொண்டது. இது புதிய பேராலயத்தின் முன்னர் வைக்கப்பட்டுள்ளது.

Miao பகுதியின் குன்றின் மேல் அமைக்கப்ப்டடுள்ள இப்பேராலயத்திற்குச் செல்வதற்கு 172 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்திலிருந்து அந்நகர் முழுவதையும் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மாடிகள் கொண்ட இப்புதிய பேராலயத்தை ராஞ்சி கர்தினால் டெலஸ்போர் டோப்போ இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்தினார்.

அருணாச்சல மாநிலம், மற்றும் அதன் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏறத்தாழ 12 ஆயிரம் விசுவாசிகள் இதில் கலந்து கொண்டனர்.

இன்னும், குவாஹாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில், ஷில்லாங் பேராயர் டொமினிக் ஜாலா, Dibrugarh ஆயர் Joseph Aind உட்பட பல ஆயர்களும் இந்தப் பேராலய திருநிலைப்பாட்டுக் கூட்டுத் திருப்பலியை நிகழ்த்தினர்.








All the contents on this site are copyrighted ©.