2010-05-04 16:08:32

உலகை அணுஆயுதங்களற்ற இடமாக மாற்றுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


மே04,2010 உலகை அணுஆயுதங்களற்ற இடமாக மாற்றுவதற்கு, அணுப்பரவல்தடை குறித்த மாபெரும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆவன செய்யுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

பயம் மற்றும் செயலற்றதன்மை இவற்றால் செயல்படாமல் ஒதுங்கியிருத்தல் அல்லது, தொலைநோக்கு, தைரியம், தலைமைத்துவம் ஆகியவைகளோடு செயல்படுதல் –இவையிரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பிரதிநிதிகளின் கையில் உள்ளது என்றும் மூன் தெரிவித்தார்.

அணுப்பரவல்தடையைக் கொண்டு வருவதற்கு நாடுகளால் இயலும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.

இத்திங்களன்று ஐ.நா.தலைமையகத்தில் தொடங்கியுள்ள இந்தக் கருத்தரங்கு, இம்மாதம் 28ம் தேதி வரை நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.