2010-05-03 16:24:16

மே 04 நாளும் ஒரு நல்லெண்ணம்


வில்சன் என்பவர் அமெரிக்க அதிபராக இருந்த சமயம் ஏற்பட்ட போரில் ஏராளமான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தார்கள். அவர்களது இறுதி அடக்கச் சடங்கு நியுயார்க் நகரில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்க வில்சன் விரும்பினார். ஆனால் அந்த இடத்தில் அவரைக் கொல்வதற்குப் பயங்கரமான சதி நடப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. அச்சமயம், அதிபர் வில்சனின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம், “நீங்கள் அங்கு செல்ல வேண்டாம். ஒரு நல்ல அதிபரை நாங்கள் இழக்க விரும்பவில்லை” என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அதிபர் வில்சன், என்னைத் தடுக்க வேண்டாம். ஒரு கோழை அமெரிக்க அதிபராக இருப்பதை என்னால் ஏற்க முடியாது என்று சொல்லி அங்கு சென்று வந்தார். வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்பு எடுப்பவர்கள்தான் உண்மையான தலைவர்கள். துணிவில்லாத தலைமை வீழ்த்திவிடும். எதிரிகளைக் கண்டு பயப்படும் தலைவர்கள் நீண்டகாலம் நிலைப்பதில்லை








All the contents on this site are copyrighted ©.