2010-05-02 16:06:12

மே 03 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்தக் குளிர் நிலா பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. அந்த முன் இரவில் அந்தக் கிணற்றுக்குச் சென்ற ஒருவன் கிணற்றில் அந்த அரைவட்ட நிலவைப் பார்த்தான். அய்யோ பாவம், இப்படி நிலவு தண்ணீருக்குள் அவதிப்படுகிறதே என்று நினைத்து அதைக் காப்பாற்ற முனைந்தான். ஒரு குச்சியை கிணற்றில் இறக்கி அதனைத் தூக்க முயற்சித்தான். முடியவில்லை. பின்னர் பல முயற்சிகளுக்குப் பின்னர் தனது இடுப்பில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டு உள்ளே பெரிய பாத்திரத்தை இறக்கி வலுக்கொண்டமட்டும் இழுத்தான். இழுத்ததில் அவன் தடுமாறி அப்படியே மல்லாந்து படுத்தான். அப்போது அந்த நிலவை மேலே பார்த்தான். அதைப் பார்த்ததும் மிகவும் பரிதாபப்பட்டானாம். இவ்வளவு உயரத்தில் இருக்கிறாயே உன்னை எப்படி காப்பாற்றுவது என்று.

நம்மிலும் எத்தனையோர் தன்னைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தன்னால் எல்லாம் முடியும் என்று.

ஆம். நாமே வளராத நாட்களெல்லாம் வாழாத நாட்களே.








All the contents on this site are copyrighted ©.