2010-04-30 15:52:23

மே 01 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1555ல் திருத்தந்தை 2ம் மார்செலுசும்,

1572 ல் திருத்தந்தை 5ம் பத்திநாதரும் இறந்தனர்.

1707 - இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இணைக்கப்பட்டு பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.

1751 - முதலாவது கிரிகெட் விளையாட்டுப் போட்டி அமெரிக்காவில் நடந்தது.

1834 - பிரித்தானிய காலனி நாடுகள் அடிமைத்தன முறையை அகற்றின

1886 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1925 - சீனாவில் அனைத்துச் சீனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1956 - இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1960 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.