2010-04-30 16:00:50

இந்தோனேசியாவில் வன்முறைகள் முழுவதுமாக நிறுத்தப்படுமாறு கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள்


ஏப்ரல்30,2010 இந்தோனேசியாவில் இடம் பெறும் வன்முறை அந்நாட்டின் பன்மைத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய ஜகார்த்தாவில் செயல்படுகின்ற பன்மைத்தன்மையைக் காக்கும் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் இவ்வியாழனன்று உரையாற்றிய இந்தோனேசிய ஆயர் பேரவையின் பல்சமய ஆணையச் செயலர் அருட்திரு Antonius Benny Susetyo, வன்முறை பொருளாதார நெருக்கடி நிலையின் அடிப்படையில் இடம் பெறுவது அல்ல, மாறாக மக்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை இழப்பதால் இடம் பெறுவது என்றார்.

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டில் இடம் பெற்றுள்ள சமய சுதந்திரம் சார்ந்த 200 வன்முறைச் சம்பவங்களில் அதிகமானவை மேற்கு ஜாவாவில் இடம் பெற்றுள்ளன என்ற அக்குரு, நாட்டில் வன்முறைகள் முழுவதுமாக நிறுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார்







All the contents on this site are copyrighted ©.