2010-04-29 15:35:25

காங்கோ ஜனநாயகக் குடியரசில் போரை முடிவுக்குக் கொண்டு வர அரசு அதிகாரிகள் உழைக்க வேண்டும் - திருத்தந்தை வலியுறுத்தல்


ஏப்ரல்29,2010 காங்கோ ஜனநாயகக் குடியரசின் சில மாநிலங்களில் இன்றும் போர் சூழல் காணப்படும் வேளை, அந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படும் சூழலில் மனித மற்றும் சமுதாய வாழ்வை மீண்டும் கட்டி எழுப்பவும் வேண்டுமென அந்நாட்டின் அரசு அதிகாரிகளை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் திருப்பீடத்துக்கான புதிய தூதர் Jean-Pierre Hamuli Mupenda விடமிருந்து இவ்வியாழனன்று திருப்பீடத்தில் நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, அந்நாடு தேசிய ஒருமைப்பாட்டின் பாதையில் உறுதியாகச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றுரைத்தார்.

குடும்பங்களில் பிறக்கும் ஒருமைப்பாடும் அமைதியும் நிறைந்த உணர்வு, பள்ளிகளில் வளர வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, அந்நாட்டிற்குக் கல்வியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதற்கு அரசு முதலீடுகளை ஒதுக்குமாறும் பரிந்துரைத்தார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசிற்குக் கடவுள் வழங்கியுள்ள இயற்கை வளங்கள் பற்றியும் பேசிய திருத்தந்தை, இவ்வளங்கள், நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் பேராசைக்குப் பலியாகின்றன என்றும் சுட்டிக்காட்டி, அவை, சமமாகப் பங்கிடப்படவேண்டியதன் அவசியத்தையும் புதிய தூதரிடம் பரிந்துரைத்தார்







All the contents on this site are copyrighted ©.