2010-04-29 15:34:26

உலக மலேரியா தினம் – மலேரியா நோய் பற்றிய விபரங்கள்


ஏப்ரல்29,2010 ஏப்ரல் 25 உலக மலேரியா தினம். அன்றைய தினத்திற்கென செய்தி வெளியிட்டிருந்த ஐ.நா.வின் யூனிசெப் (UNICEF) நிறுவனத்தின் தலைவர் Ann Veneman, கொசுவலைகளைப் பயன்படுத்துவதால் குறிப்பிடத்தக்க அளவில் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களைத் தடுக்க முடியும் என்ற நிலை இருந்தும்கூட, மலேரியாவினால் ஆண்டுதோறும் 8,50,000 பேர் இன்னும் இறக்கின்றனர், இவ்விறப்புக்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம் பெறுகிறது, இவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட சிறார் என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டில் இந்தியாவில் 15 இலட்சம் பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இந்தத் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த மலேரியா நோய் பற்றி அறிவதற்கு அருட்சகோதரி டாக்டர் கொன்ராட் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி கொன்ராட், உவரியில் பணியாற்றுகிறார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.