பாலியல் வன்முறை தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலரின்
சிறப்பு பிரதிநிதி
ஏப்ரல்28,2010 பாலியல் வன்முறை தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் மற்றும்
அக்குற்றத்தைச் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்பு பிரதிநிதி Margot Wallström ஐ.நா.பாதுகாப்பு
அவையிடம் கேட்டுக் கொண்டார்.
“உலகின் கற்பழிப்பு தலைநகர்” என நோக்கப்படும் காங்கோ
ஜனநாயகக் குடியரசில் சுற்றுப்பயணத்தை முடித்து வந்துள்ள Wallström பெண்களின் உரிமைகளை
மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படும் பொழுது பெண்களுக்கு உரிமைகளே இல்லை என்று
கூறினார்.
கடந்த ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம் பெற்ற சண்டையின் போது
எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் என்று Wallström அறிவித்தார்.