2010-04-28 16:13:29

குடியேற்றம் பிரச்சனையாக இல்லை, அது திருச்சபைக்கும் சமுதாயத்துக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கின்றது - ஸ்பானிய ஆயர்கள்


ஏப்ரல்28,2010 மாலாகாவில் நடைபெறும் இந்த ஐரோப்பிய கருத்தரங்கு குறித்து கருத்து தெரிவித்த ஸ்பானிய ஆயர்கள், குடியேற்றம் ஒரு பிரச்சனையாகவோ, அச்சுறுத்தலாகவோ அல்லது ஓர் ஆக்ரமிரப்பாகவோ இல்லை, மாறாக அது திருச்சபைக்கும் சமுதாயத்துக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்று கூறினர்.

ஐரோப்பாவில் வேற்று நாட்டவரின் குடியேற்றம் ஏற்படுத்தியுள்ள கலக்கத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் புதிய கூறுகளுக்கு ஆயர்கள் அழைப்பு விடுப்பதாக ஸ்பானிய ஆயர் பேரவையின் குடியேற்றம் குறித்த செயலகத்தின் இயக்குனர் சேசு சபை அருள்தந்தை ஹோசே லூயிஸ் பினில்லா தெரிவித்தார்.

குடியேற்றம் மக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்று அக்குரு மேலும் கூறினார்.

திருச்சபை குடியேற்றதாரரை வரவேற்க வேண்டும் எனவும் வலியுறுத்திய சேசு சபை அருள்தந்தை பினில்லா, இம்மக்கள் ஒதுக்கப்படுவது மற்றும் தண்டிக்கப்படுவது குறித்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்








All the contents on this site are copyrighted ©.