2010-04-28 16:14:40

அமெரிக்கக் காங்கிரஸ் அவை உறுப்பினர்கள், அணுஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதற்குத் தொடர்ந்து உழைக்க ஆயர்கள் வற்புறுத்தல்


ஏப்ரல்28,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்கள், ஆயுதக் குறைப்பு உடன்பாட்டை அமல்படுத்தவும் அணுஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதற்குத் தொடர்ந்து உழைக்கவும் வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

ஒபாமா நிர்வாகத்தின் அணுஆயுதக் கொள்கையின் அறநெறிகள் - கத்தோலிக்கப் பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆயர்களின் இந்த அழைப்பை உறுதி செய்தார் பால்டிமோர் பேராயர் எட்வின் ஒபிரைன்.

ஆயுதக் குறைப்பு புதிய யுக்திகள் ஒப்பந்தம் இம்மாதம் 8ம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ளது குறித்தும் பேசிய பேராயர் ஒபிரைன், இது சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள நல்ல முயற்சி என்றும் புகழ்ந்தார்.

இந்த உடன்பாடு, அணுஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை சமைக்கும் ஒழுக்கநெறி நோக்குடையது என்றும் பால்டிமோர் பேராயர் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.