2010-04-27 15:28:57

கந்தமால் மாவட்டத்தில் இடம் பெறும் பெண் வியாபாரம் குறித்து திருச்சபைத் தலைவர்கள் அதிர்ச்சி


ஏப்ரல்27,2010 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளுக்கு மையமாக விளங்கிய கந்தமால் மாவட்டத்தில் பெண் வியாபாரம் அதிகரித்து வருவது குறித்தத் தங்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர் ஒரிசா மாநிலத் திருச்சபைத் தலைவர்கள்.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திலிருந்து பெருமளவான இளம்சிறுமிகள் வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்று பெர்ஹாம்பூர் ஆயர் சரட் சந்திர நாயக் கூறினார்.

இந்துத்துவத் தீவிரவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை இல்லை மற்றும் அவர்கள் தங்கள் நிலங்களைப் பயிர்செய்ய முடியாமல் இருப்பதால், கடும் வறுமையை அனுபவிக்கின்றனர் என்று ஆயர் நாயக் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பெண் வியாபாரம் குறித்துப் பேசிய கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத், அடக்குமுறையும் வன்முறையும் மக்களின் வாழ்வையும் வாழ்க்கை ஆதாரங்களையும் அழித்துள்ளன என்றும் போலி வாக்குறுதிகளை அளிக்கும் பெண் வியாபாரிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கந்தமாலில் 2000 மாம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 3,578 பெண்கள் காணாமற்போயுள்ளனர். இவர்களி்ல் 12க்கும் 14 வயதுக்கும் உட்பட்டோர் 1,418 என்றும், 21க்கும் 30 வயதுக்கும் உட்பட்டோர் 1,342 என்றும் ஊடகங்கள் அறிவித்துள்ளன







All the contents on this site are copyrighted ©.