2010-04-27 15:32:54

கத்தோலிக்க மற்றும் முஸ்லீம்களுக்கு்ம் இடையேயான உரையாடல் பரஸ்பரம் மற்றும் திறந்த மனம் உடையதாயும் இருக்க வேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்கள்


ஏப்ரல்27,2010 கத்தோலிக்க மற்றும் முஸ்லீம்களுக்கு இடையேயான உரையாடல் பரஸ்பரம் மற்றும் திறந்த மனம் உடையதாய் இருக்க வேண்டும், அதேசமயம் இசுலாமிய உலகத்தில் கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அறிவிக்கும் உரிமை உட்பட அவர்களுக்கு முழு சமய சுதந்திரம் இருக்க வேண்டும் என மத்திய கிழக்குப் பகுதியின் பல கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

வத்திக்கானில் வருகிற அக்டோபர் 10 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கான வரைவுத் தொகுப்பில் ஈடுபட்டுள்ள பல வல்லுனர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அம்மாமன்றத்திற்கெனத் தயாரிக்கப்பட்டு வரும் தொகுப்பில் இசுலாம் மதத்தவரோடு உரையாடல் நடத்துவது முக்கிய தலைப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்து வந்துள்ள பதில்களை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் இத்தொகுப்பு வருகிற ஜூனில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சைப்ரஸ்க்குச் செல்லும் போது வெளியிடப்படும்.

மேலும், மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கென லெபனன் மாரனைட் பிதாப்பிதா Nasrallah Sfeir, பாக்தாத் கல்தேயரீதி பிதாப்பிதா Emmanuel Delly, கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri, சிரிய கத்தோலிக்கப் பிதாப்பிதா Ignace Youssif Younan ஆகியோரைத் தலைவர்களாக நியமித்துள்ளார் திருத்தந்தை.

பொதுத் தொடர்பாளராக காப்டிக் ரீதி அலெக்சாந்திரியா பிதாப்பிதா Antonios Naguib, சிறப்பு செயலராக சைப்ரஸ் மாரனைட் பேராயர் Joseph Soueif ஆகியோரையும் நியமித்துள்ளார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.