2010-04-26 15:47:16

ஜார்க்கண்டில் வீசும் கடும் வெப்பக் காற்றுக்குப், பெருமளவில் காடுகள் அழிக்கப்படுவதே காரணம் - தலத்திருச்சபை குறை


ஏப்ரல்26,2010 கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் குறைந்தது 8 பேர் இறப்பதற்குக் காரணமாய் இருக்கின்ற கடும் வெப்பக் காற்றுக்குப், பெருமளவில் காடுகள் அழிக்கப்படுவதே காரணம் என்று தலத்திருச்சபை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் 13ல் வெப்பநிலை 47 செல்சியுஸ் டிகிரியை எட்டியுள்ளதையடுத்து இத்திங்களன்று பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுவாக மே 15ம் தேதி தான் அம்மாநிலத்தில் கோடை விடுமுறை தொடங்கும்.

சாலைகளை விரிவுபடுத்தவும் கட்டங்கள் கட்டவும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கு அரசு நிர்வாகம் அனுமதி அளித்தது குறித்து குறை கூறினார் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் அமைப்பின் தலைவர் கத்தோலிக்க குரு இக்னேஸ் தோப்னோ.

குளங்களும் அணைகளும் வறண்டுள்ள சூழ்நிலையில் அவற்றின் தண்ணீர் மட்டத்தை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அக்குரு கூறினார்.

சூற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்மாநிலத்தின் ஆறு நீர்வீழ்ச்சிகளும் முற்றிலும் வற்றிப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.