2010-04-26 15:48:35

ஆஸ்திரிரேலிய அகதிகளை நடத்தும் முறையை வைத்தே அதன் மதிப்பு கணிக்கப்படும்- ஆயர் சான்டெர்ஸ்


ஏப்ரல்26,2010 ஆஸ்திரேலியா, அகதிகளை நடத்தும் முறையை வைத்தே அதன் மதிப்பு கணிக்கப்படும் என்று அந்நாட்டு கத்தோலிக்க சமூகநீதி அவையின் தலைவர் ஆயர் Christopher Saunders கூறினார்.

அகதிகள் குறித்த விவகாரத்தில் அரசியலில் நல்லதொரு தலைமைத்துவம் மிகவும் தேவைப்படுகின்றது என்றுரைத்த ஆயர், அகதிகள் குறித்து அண்மை மாதங்களில் ஆஸ்திரேலியாவில் காணப்படும் மனநிலை ஏற்புடையதாக இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடுவோர் மீது இரக்கம் காட்ட வேண்டுமென கேட்டுள்ள ஆயர் Saunders, அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் ஆஸ்திரேலியாவைவிட மிக அதிகமாகவே அகதிகளுக்குச் செய்கின்றன என்றார்.

ஒரு கோடியே 60 இலட்சம் அகதிகள் மற்றும் புகலிடம் தேடுவோர் உட்பட உலகஅளவில் உள்ள 4 கோடியே 20 இலட்சம் புலம் பெயர்ந்த மக்களில், ஆஸ்திரேலியாவில் 14 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உள்ளனர் என்று ஆயர் கூறினார்.

வளரும் நாடுகளிலிருந்து பெருமளவான மக்கள் புகலிடம் தேடுவதாகவும் ஆயர் Saunders தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.