2010-04-25 12:18:37

ஏப்ரல் 26 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்தக் குடும்பத்தில் குமார் ஒரே மகன். அவனுக்கு இரண்டு தங்கைகள். பல கடும் பொருளாதாரச் சுழல்களில் நல்ல மதிப்பீடுகளோடு குமார் வளர்ந்தான். நன்றாகப் படித்து நல்ல வேலை தேடி தங்கைகளுக்குக் கல்யாணம் முடித்து அப்பா அம்மாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென விரும்பினான். பெங்களூரில் பெரிய ஐ.டி.கம்பெனியில் வேலை கிடைத்தது. மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்ச் சம்பளம். வீட்டு அலவன்ஸ், கார் மற்றும் பல. ஆனால் ஒருசில மாதங்களில் இந்தப்பணம், வசதி, நண்பர்கள் என அனைத்தும் இணைந்து அவனைச் சுயநலவாதியாக மாற்றிவிட்டன. நுகர்வுக் கலாச்சாரப் பிடியில் சிக்கியவனாய் உள்ளத்திலிருந்த நல்ல எண்ணங்களையும் மதிப்பீடுகளையும் மறந்தான். பலவகையான சுய இன்பங்களிலும் ஈடுபட்டு தேவைகளை அதிகரித்துக் கொண்டு அவைகளை நிறைவேற்றும் காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்தான். 32 வயதில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. தற்கொலையும் செய்து கொண்டான்.

ஆம். இன்று வாழ்க்கையில், சேர்க்க வேண்டும், சுகம் காண வேண்டும் என்ற வேட்கை, மனித வாழ்வின் ஆழமான அர்த்தங்களைச் சிதறடிக்கிறது. மனிதா, நீ உன் பணத்தை, உடல்நலத்தை, நீ அன்பு செய்வோரை இழக்கலாம். ஆனால் நீ இறைவன் மீதான நம்பிக்கையை இழந்தால் அது உன் வாழ்வையே நரகமாக்கிவிடும்







All the contents on this site are copyrighted ©.