பெல்ஜியத்தில் திருச்சபை தனது கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டுமென விரும்புகிறது
- திருத்தந்தை
ஏப்ரல்24,2010 பெல்ஜியம் நாடு இவ்வாண்டு துவக்கத்தில் எதிர்கொண்ட இரண்டு பெரும் விபத்துக்கள்
மனிதப் பலவீனங்களைக் காட்டும் வேளை அவை மனித வாழ்வுப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும்
உணர்த்துகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்தார்.
திருப்பீடத்துக்கான
பெல்ஜிய நாட்டுப் புதிய தூதர் Charles Ghislain (ghilén டமிருந்து இச்சனிக்கிழமை நம்பிக்கைச்
சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, இவ்விபத்துக்களில் பலியானவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வை மீண்டும் தெரிவிப்பதாகக் கூறினார்.
பெல்ஜியத்தில்
மறைப்பணியாற்றும் கத்தோலிக்கத் திருச்சபை பல கல்வி நிறுவனங்கள், சமூகப்பணிகள், தன்னார்வப்
பணிகள் போன்றவற்றால் சமுதாயத்திற்குப் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, அது
தனது கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டுமென விரும்புவதாகக் கூறினார்.
பெல்ஜிய
நாட்டுப் புனிதரான புனித தமியான் உலகில் அடைந்துள்ள புகழ் குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை,
இத்தகைய புனிதர்களின் சாட்சிய வாழ்வு நற்செய்திக்கு யாரும் பயப்படத் தேவையில்லை என்பதைக்
காட்டுகிறது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.
ஐரோப்பிய சமுதாய அவையின் தலைமையகம்
பெல்ஜியத்தில் இருப்பது பற்றிப் பேசிய அவர், குழப்பமான சூழல்களில் தெளிவான தீர்வு கிடைப்பதற்கு
பெல்ஜிய நாடு உதவ முடியும் என்பதையும் புதிய தூதர் Ghislain டம் திருத்தந்தை சுட்டிக்
காட்டினார்.