2010-04-24 16:11:13

திருச்சபை இணையதளத்தில் கிறிஸ்தவ தனித்துவத்தை வலியுறுத்த வேண்டும் இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர்


ஏப்ரல்24,2010 திருச்சபை இணையதளத்தில் கிறிஸ்தவ தனித்துவத்தை வலியுறுத்த வேண்டும் என்று இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் Mariano Crociata கூறினார்.

திருச்சபை குழுவால் புதிய ஊடக அலைவரிசைகள் ஊக்குவிக்கப்படும்வேளை, அவை, அதிகமாகத் தேவைப்படும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்குப் பதில் சொல்வதாய் செயல்பட வேண்டுமென்று ஆயர் குரோஷாத்தா கூறினார்.

புதிய தலைமுறைகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை வழங்கும் நோக்கத்தில் “டிஜிட்டல் சாட்சிகள்” என்ற தலைப்பிலான இத்தாலிய தேசிய மாநாட்டை இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco துவக்கி வைத்தார்.

இதில் உரையாற்றிய ஆயர் Crociata, இளையோர் டிஜிட்டல் பூர்வீகத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள், வேறுவிதமான மொழியைக் கொண்டிருப்போருக்கு போதிப்பதாக இன்றைய டிஜிட்டல் உலகம் இருக்கின்றது என்றும் கூறினார்.

டிஜிட்டல் ஊடகத்தில் திருச்சபை புதிய கல்வியறிவை வளர்க்க வேண்டியிருக்கிறது என்றும் உரையாற்றிய ஆயர், நற்செய்தியை மேலானதாகக் குறித்துக் காட்டும் கிறிஸ்தவத் தனித்துவம் இந்த ஊடகத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.