2010-04-24 16:12:09

சிறாரின் மாண்பையும் உரிமைகளையும் மதிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை - சர்வதேச கத்தோலிக்க சிறார் அமைப்பு


ஏப்ரல்24,2010 சிறார் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும், இதைவிட, அவர்கள் மதிக்கப்பட வேண்டியது இன்னும் அதிக முக்கியமானது என்று சர்வதேச கத்தோலிக்க சிறார் அமைப்பு வலியுறுத்தியது.

எங்கு, யாரால் சிறார் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டாலும் அதை வனமையாகக் கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள இச்சர்வதேச அமைப்பு, சிறாரின் மாண்பையும் உரிமைகளையும் மதிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று குறிப்பிட்டுள்ளது.

பாலியல் வன்முறைக் குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற வழிமுறைகள் உட்பட திருப்பீடம் வெளியிட்டுள்ள வெளியீட்டை வரவேற்றுள்ளது. அத்துடன் ஐ.நா. சிறார் உரிமைகள் ஒப்பந்தத்தை அனைவரும் செயல்படுத்துமாறும் இவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

சர்வதேச கத்தோலிக்க சிறார் பிரிவானது, போரினால் பாதிப்படைந்த சிறாருக்கு உதவும் நோக்கத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதரின் விருப்பத்தின்பேரில் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது சிறாரின் உரிமைகளுக்காகப் பரிந்துரைத்து வருகிறது. ஜெனீவாவில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இவ்வமைப்பின் கிளைகள் 66 நாடுகளில் செயல்படுகின்றன.








All the contents on this site are copyrighted ©.