2010-04-24 16:13:51

உலகிலே மிக உயரமான நீர்த்தேக்கத்தைச் சீனா கட்டத் திட்டமிட்டிருப்பது இந்தியர்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது


ஏப்ரல்24,2010 Yarlung Zangbo நதி மீது உலகிலே மிக உயரமான நீர்த்தேக்கத்தைச் சீனா கட்டத் திட்டமிட்டிருப்பது இந்தியர்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

திபெத்தில் உற்பத்தியாகும் இந்த Yarlung Zangbo நதியானது இந்திய எல்லைக்குள் பாயும் பொழுது அதனை இந்தியர்கள் பிரமபுத்திரா நதியென அழைக்கிறார்கள். இது இலட்சக்கணக்கான மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

மேலும், இந்த அணையானது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எல்லைப் பிரச்சனையாக இருக்கும் பகுதிக்கு அருகில் கட்டப்படவிருக்கிறது. 3260 மீட்டர் உயரத்திற்கு சிறப்புப் பொருட்கள் மற்றும் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படவிருக்கின்றது.

இது சீனப் பகுதியில் கட்டப்பட்டாலும், நதியின் ஓட்டத்தைக் குறைக்கக் கூடாது என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக இருக்கின்றது என்று இந்தியாவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.