2010-04-23 15:21:55

ஸ்பெயினில் குடும்ப மதிப்பீடுகளின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை- கர்தினால் Varela


ஏப்ரல்23,2010 ஸ்பெயினில் குடும்ப மதிப்பீடுகளின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை, அதற்கு மாறாக தீவிரமான மரணக் கலாச்சாரத்தை நோக்கி சமுதாயம் சென்று கொண்டிருக்கும் கடும் அச்சுறுத்தலையும் காண முடிகின்றது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Antonio Rouco Varela கூறினார்.

ஸ்பெயின் ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கர்தினால் வரேலா, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஸ்பெயினுக்கு இவ்வாண்டில் இரண்டு தடவைகள் செல்லவிருப்பது குறித்தும் விளக்கினார்.

வருகிற ஆகஸ்டில் உலக இளையோர் தினத்தைச் சிறப்பிக்கவும், வருகிற நவம்பரில் புனித ஆண்டைச் சிறப்பிப்பதற்கு Santiago de Compostela. வுக்கும் திருத்தந்தை செல்லவிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால், திருத்தந்தையின் இத்திருப்பயணம் இன்றைய திருச்சபைக்குத் தேவையான விடயங்கள் பற்றிச் சிந்திக்க உதவும் என்றார்







All the contents on this site are copyrighted ©.