2010-04-23 15:26:31

லெபனனின் இராணுவத்திற்கும் ஹெஸ்புல்லாவுக்குமிடையே ஒருங்கிணைப்பு தேவை- பிதாப்பிதா Sfeir


ஏப்ரல்23,2010 லெபனனிலுள்ள அனைத்துப் படைப் பிரிவினருக்குமிடையே, குறிப்பாக அரசு இராணுவத்திற்கும் ஹெஸ்புல்லாவுக்குமிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகின்றது என்று அந்நாட்டு மாரனைட் ரீதி கத்தோலிக்க பிதாப்பிதா கர்தினால் Nasrallah Sfeir கூறினார்.

மத்திய கிழக்குத் திருச்சபைகளுக்கான ஆயர் மன்றத் தயாரிப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உரோமை வந்துள்ள கர்தினால் Sfeir, இவ்வாறு நிருபர்களிடம் கூறினார்.

லெபனனின் சமய அடிப்படையிலான அரசியல் அமைப்பு முறையை இரத்து செய்வது குறித்த சபாநாயகர் Nabih Berry எழுப்பியுள்ள விண்ணப்பம் குறித்துப் பேசிய கர்தினால், இதற்கு அனைவரும் இசைவு தெரிவித்தால் திருச்சபை தடையைய் இருக்காது என்று கூறினார்.

லெபனனில் அரசுத்தலைவர் கிறிஸ்தவர், பிரதமர் சுன்னிப் பிரிவைச் சேர்ந்தவர், நாடாளுமன்ற பேச்சாளர் ஷியட் பிரிவைச் சேர்ந்தவர்.








All the contents on this site are copyrighted ©.