2010-04-23 15:32:31

இஸ்ரேலின் புதிய இராணுவ விதிமுறைக்கு WCC பொதுச் செயலர் எதிர்ப்பு


ஏப்ரல்23,2010 West Bankல் வாழும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைப் பிரித்து வைக்கும் இஸ்ரேலின் புதிய இராணுவ விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றப் பொதுச் செயலர் பாஸ்டர் Olav Fykse Tveit.

இந்தப் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு முறையான தங்கும் அனுமதிகள் இல்லையென்பதால் அவர்கள் வெளியேற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு இராணுவ அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.

1969ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பே நுழைந்தவர் அல்லது சரியான ஆவணமின்றி குடியிருப்பவர் எவரையும் இஸ்ரேல் இராணுவம் “ஊடுருவியவர்” என்று முத்திரை குத்தியுள்ளது. அத்தகையவர்களை வெளியேற்றுவதற்கு தற்போதைய புதிய விதிமுறை அனுமதியளிக்கின்றது.

இது அமல்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைப் பாதிக்கும் என்று WCC பொதுச் செயலர் பாஸ்டர் Tveit கவலை தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.