2010-04-23 15:32:04

ஆசியக் கிறிஸ்தவ அவைக்கு முதல் பெண் பொதுச் செயலர்


ஏப்ரல்23,2010 ஆசியாவில் போர்ச் சூழல் காணப்படும் பகுதிகளில், இனம், நிறம், மதம் என்ற வேறுபாடின்றி அமைதிச் சமூகங்களைக் கட்டியெழுப்புமாறு CCA என்ற ஆசிய கிறிஸ்தவ கருத்தரங்கு அழைப்பு விடுத்தது.

ஏப்ரல் 15 முதல் 22 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 13வது ஆசிய கிறிஸ்தவ கருத்தரங்கில் கலந்து கொண்ட சுமார் 300 பிரதிநிதிகள், கொரியச் சண்டையின் முக்கிய உறுப்பினர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுத்தனர்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கொரியச் சண்டை குறித்து குறிப்பிட்டு ஆயுதம் தாங்கிய மோதல்கள் நிறுத்தப்படுமாறும் கேட்டுக் கொண்ட அவர்கள், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதட்டநிலைகள் குறித்த கவலையையும் தெரிவித்தனர்.

கொரியச் சண்டையில் சுமார் 25 இலட்சம் கொரியர்கள் உயிரிழந்தனர்.

ஆசிய கிறிஸ்தவ அமைப்பில் ஆசிய மற்றும் பசிபிக் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சபைகளும் 20 தேசிய அவைகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், இந்த ஆசியக் கிறிஸ்தவ அவையின் புதிய பொதுச் செயலராக, இந்தோனேசியாவின் சுலவேசியைச் சேர்ந்த Henriette Tabita Hutabarat Lebang என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் ஆவார்








All the contents on this site are copyrighted ©.