2010-04-21 16:01:18

நாளும் ஒரு நல்லெண்ணம் – ஏப்ரல் 22


பலவேளைகளில் நாம் தீர்ப்புகளை எழுதிவிட்டு நியாயப்படுத்த படாதபாடுபடுகிறோம். எத்தனையோ அநியாய தீர்ப்புகளை எழுதி விட்டு அவைகள் அநியாயமானவைகள் என்பது தெரிந்தும் நம் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதே என்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சத்தியம் செய்யத் தயாராக இருந்திருக்கிறோம்.

நாம் பிறரைப்பற்றி எழுதிய தீர்ப்பு தவறு என்று மனது அடித்துச் சொன்னாலும், சுயகௌரவமோ நியாயப்படுத்தல் எனும் நுனி பிடித்து தன் வெற்றியை மட்டுமே உறுதி செய்ய உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கும்.

ஏன் இத்தனை பிடிவாதங்கள்?

ஏன் இந்த சுயகௌரவத்திற்கு இத்தனை முக்கியத்துவம்?

விட்டுக் கொடுத்தால் வீணாகிப் போய்விடுவோமா என்ன?

சட்டம் ஒன்றாய் இருந்த போது கூட, நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்புகளை தந்தது உண்டு ஒரே வழக்கில்.

மறைந்து போயிருந்த உண்மைகள் வெளிவரும்போது மறுபரிசீலனைகள் உருவாகியிருக்கலாம்.

ஆனால் நம்மில் பலர், செய்தது தவறு என தெரிந்திருந்தும் தீர்ப்புகளை மாற்றி எழுத ஏன் தயங்குகிறோம் என ஒரு சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

நம் தீர்ப்புகளால் பாதிக்கப்படுபவர்களுக்காக மட்டுமல்ல, நம்மையே நாம் சீர்படுத்தி முழுமையடைய.

நமது செயல்கள் நமது பார்வையில் முற்றிலும் சரியானவையாகத் தோன்றலாம் சில சமயம்.

உண்மை தெரிய வரும்போது... பிரச்சினையின் உண்மைத்தன்மையை முழுமையாய் அறிந்து கொள்ள முயற்சி செய்து, தவறெனில் அதை ஏற்பதே மனிதன் எனற கூற்றிற்கு ஏற்புடையதாக இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.