2010-04-21 15:27:42

அணுஆயுதங்கள் தடைசெய்யப்பட ஜப்பான் கத்தோலிக்கத் திருச்சபை அரசிடம் மனு


ஏப்ரல்21,2010 அணுஆயுதங்கள் தடைசெய்யப்பட வேண்டும் மற்றும் அவற்றின் மீதான கடுமையான வரையறைகள் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டுமென்ற 16 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை ஜப்பான் கத்தோலிக்கத் திருச்சபை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami, ஒசாகா (Osaka) துணை ஆயர் Michael Goro Matsuura ஆகியோர் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் குழு, இந்தப் புகார் மனுவை, காபினெட் செயலர் Yorihisa Matsuno விடம் சமர்ப்பித்தனர்.

அணுஆயுதங்களை அழிப்பதில் அரசுகள் தீவிரமாகச் செயல்படுமாறு கேட்டுள்ள அக்குழு, ஜப்பான் அரசு வழியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரை வலியுறுத்துவது ஆயர்களின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் கூறியது.

வருகிற மே மாதம் 3ம் தேதி நியுயார்க்கில் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் குறித்த மாநாடு நடைபெறவிருப்பதையொட்டி ஜப்பான் தலத்திருச்சபை இம்முயற்சியை எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.