2010-04-20 15:50:25

அண்மைப் புயலால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு காரித்தாஸின் உதவிகள்


ஏப்ரல்20,2010 இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அண்மைப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கும் நோக்குடன் இழப்பீடுகளை மதிப்பீடு செய்து வருகின்றது காரித்தாஸ் அமைப்பு.

இந்தியாவின் அசாம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தைத் தாக்கி 128 பேரின் உயிரிழப்புக்கும் ஆயிரக்கணக்கானோரின் உறைவிட இழப்புக்கும் காரணமான பெரும்புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்து வரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, பயிர்கள் அழிவு, சாலைகள் சேதம், தொலைபேசி மற்றும் மின்தடைகள் போன்றவைகள் குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உறைவிடங்களை வழங்குவது தங்கள் முதல் நோக்கமாக இருக்கும் என்றார் காரித்தாஸ் அமைப்பின் நெல்சன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் ஆற்றிவரும் பணிகளைக் கருத்தில் கொண்டு தங்கள் பணியும் இணைந்து செல்லும் என்றார் நெல்சன்.








All the contents on this site are copyrighted ©.