2010-04-19 14:41:44

மால்ட்டா திருப்பயணத்தை நிறைவு செய்து ரோம் திரும்பினார் திருத்தந்தை.


ஏப்ரல்19,2010. மால்ட்டா விமான நிலையத்தில் இடம் பெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை, புனித பவுல் அறிவித்த நற்செய்தி மால்ட்டா மக்களின் ஆன்மீக தனித்துவத்தை எவ்வளவு தூரம் வடிவமைத்துள்ளது என்பதை இப்பயணத்தில் தன்னால் உணர முடிந்தது என்று கூறினார்.

மால்ட்டா மக்கள் நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் உயிரோட்டமான கிறிஸ்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாக வாழுமாறும் அவர்களின் கிறிஸ்தவ அழைப்பு குறித்து பெருமையடைந்து சமய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தில் வளமையடையுமாறு ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.

திருமணம் மற்றும் ஒருங்கிணைந்த குடும்பம், மனித வாழ்வின் புனிதம், கடவுளின் படைப்பு ஆகியவற்றின் மீது ஆழமான மதிப்பு கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

மனித சமுதாயத்தின் இறுதிக்கதி, பொதுவான மூலம் மற்றும் மனித வாழ்வின் மீதான தெளிவான கண்ணோட்டத்துடன் நற்செய்தி மதிப்பீடுகளை வளர்க்குமாறும் மால்ட்டா மக்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இவ்வுரையை நிறைவு செய்து மால்ட்டா மக்களை ஆசீர்வதித்து அங்கிருந்து உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. இத்துடன் அவரது 14வது வெளிநாட்டுத் திருப்பயணமும் நிறைவடைந்தது.








All the contents on this site are copyrighted ©.