2010-04-19 15:20:07

ஏப்ரல் 20 வரலாற்றில் இன்று


1303 - திருத்தந்தை எட்டாம் Boniface உரோம் La Sapienza பல்கலைகழகத்தை நிறுவினார்

1534- Jacques Cartier தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவையும் Labrador வையும் கண்டுபிடித்தார்.

1657 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் தற்போதைய நியூயார்க் நகரமான நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.

1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.

1884 – திருத்தந்தை 13ம் லியோ Humanum Genus என்ற திருமடலை வெளியிட்டார்

1902 – Pierre, Marie Curie ஆகிய இருவரும் ரேடியம் குளோரைட்டை சுத்தப்படுத்தினர்

1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1945 - அடால்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்கப் பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

1972 - அப்போலோ 16 விண்கலம் நிலவில் இறங்கியது.








All the contents on this site are copyrighted ©.