2010-04-19 15:19:12

ஏப்ரல் 20 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒரு சமயம், ஒரு பிரபு, தெய்கூ (Daigu) கூடோ (Gudo) என்ற இரண்டு ஜென் ஞானிகளை அழைத்திருந்தார். அங்குச் சென்றதும் கூடோ என்ற ஞானி அந்தப் பிரபுவிடம், “நீங்கள் பிறவியிலேயே புத்திசாலிதான். உங்களிடம் ஜென்னைக் கற்றுக் கொள்ளும் திறமை இயற்கையாகவே இருக்கிறது” என்று புகழ்ந்து பேசினார். இதைக்கேட்ட தெய்கூ, கூடோவிடம், “முட்டாள்தனமாகப் பேசாதே. ஒன்றும் தெரியாத இந்தப் பிரபுவை ஏன் அனாவசியமாகப் புகழ்கிறாய். அவர் பிரபுவாக இருக்கலாம். ஆனால் ஜென்னைப் பற்றி ஒன்றும் தெரியாது”என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பிரபு கூடோவுக்கு ஒரு கோவிலைக் கட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக, உண்மையைச் சொன்ன தெய்கூவுக்கு அதைக் கட்டிக் கொடுத்து அவரிடமே ஜென் பயின்றார்.

சிந்திப்போமா - பிறரை முகஸ்துதி செய்பவன் பிறரிடமிருந்து முகஸ்துதியையே எதிர்பார்க்கிறான். முகஸ்துதி ஒருகாலும் நிலைத்து நிற்காது. தன்னை அறிந்து கொள்ள முயற்சிக்கும் எவனும் பிறரிடமிருந்து முகஸ்துதியை ஒருபோதும் எதிர்பார்க்கமாட்டான்.








All the contents on this site are copyrighted ©.