2010-04-19 14:29:05

ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையைக் குறை கூறியுள்ளது கத்தோலிக்க அவை.


ஏப்ரல் 19. ஆஸ்திரேலியாவில் அகதிகளாகக் குடியேற முயலும் இலங்கை மற்றும் ஆஃப்கான் மக்களின் விண்ணப்பங்களை ஆஸ்திரேலிய அரசு ஏற்க மறுத்துள்ளது, மனிதபிமான கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கையாகும் என குற்றம் சாட்டியுள்ளது புனித வின்சென்ட் தெ பால் சபை.

இனவெறியைக் கோடிட்டுக்காட்டும் இத்தகைய ஒரு நடவடிக்கைக் குறித்து இக்கத்தோலிக்க அமைப்பு மிகுந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்தார் அதன் தேசிய அவைத் தலைவர் ஜான் ஃபல்சோன்.

ஏற்கனவே ஆஃப்கானிலும் இலங்கையிலும் சுமுக நிலை திரும்பியுள்ளதாக, மக்களை ஆபத்தான நிலைக்கு திருப்பி அனுப்பியுள்ள ஆஸ்திரேலிய அரசு, தற்போது மீண்டும் மக்கள் ஆபத்துக்களை எதிர் நோக்கும்போதும் அதே பதிலைத் தருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் ஃபல்சோன்.

ஆஃப்கான் மற்றும் இலங்கை அகதிகள் அனைவரின் விண்ணப்பங்களையும் ஆஸ்திரேலிய அரசு மொத்தமாக நிராகரித்துள்ளது, அவர்கள் மனிதருக்குரிய மாண்புடன் நடத்தப்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என அரசை குறை கூறியுள்ளது பிரிஸ்பேன் பெருமறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி அவை.








All the contents on this site are copyrighted ©.