2010-04-18 15:00:56

திருத்தந்தை மால்ட்டா விமான நிலையத்தில் ஆற்றிய உரை


ஏப்ரல்18,2010 RealAudioMP3 என்னுடைய இத்திருப்பயணம் மிகக் குறுகிய கால அளவை உடையதெனினும் இது மிகப்பெரும் நலன்களைக் கொணரும் என நம்புகிறேன். கப்பல் சேதம் காரணமாக புனித பவுல் மால்ட்டாவில் காலடி பதித்ததன் 1950ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க இங்கு வந்துள்ளேன். அவர் இங்கு வந்து இறங்கியதை இறைவனின் திட்டமாகக் காண்கிறோம். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை மால்ட்டா நாடானது ஐரோப்பா மற்றும் மத்தியதரைக்கடல் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களின் சந்திப்புச் சாலையாக இருந்து வருகிறது. வட ஆப்பிரிக்கா, அண்மை கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் அரசியல் மத மற்றும் கலாச்சார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்நாட்டின் வளமான, மேன்மைநிறை கலாச்சாரத்தை வடிவமைப்பதில் கிறிஸ்தவ மறைப்பணி முக்கிய பங்காற்றியுள்ளது. கிறிஸ்தவத்தைப் பாதுகாக்கவும் கிறிஸ்தவப் பிறரன்பு நடவடிக்கைகளை எடுத்து நடத்தவும் மால்ட்டா ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றிகள் பல. திருமணத்தின் புனிதத்துவம், மனித உயிரின் மாண்பு, சமய விடுதலை, குடும்பம் முதலியவைகளுக்காக உழைத்து வரும் மால்ட்டாவின் பணிகள் தொடர ஊக்குமூட்டுகிறேன். தெற்குக்கும் வடக்குக்கும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் நட்புறவை ஊக்கமளித்து வளர்க்க மால்ட்டாவால் இயலும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இம்முதல் உரையை நிறைவு செய்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.