சிரிப்பு வெடிகளைச் சரமாய்த் தொடுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிரிப்புடன்
சில ஆழமான கருத்துக்களையும் அவ்வப்போது கேட்கலாம். அப்படி நான் கேட்டு என் மனதில் பதிந்த
ஒரு கருத்து இது: தான் பெற்ற காற்றை யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல், முழுவதும் தன்னிலேயே
அடைத்து வைத்துக் கொள்ளும் கால்பந்து விளையாட்டுத் திடலில் மண்ணில் விழுந்து, பலரது கால்களால்
மிதிபடுகின்றது.அதற்கு மாறாக, தான் பெற்ற காற்றை தன்னிலேயே கொஞ்சமும் வைத்துக் கொள்ளாமல்,
துளைகளின் வழியே இசையாய் வெளியிடும் புல்லாங்குழல் இசைக் கலைஞர்களின் கைவிரல்களால், அவர்களது
மூச்சுக் காற்றால் இசையாக வெளியாகின்றது. மேடையேறும் புல்லாங்குழல் ஆயிரக்கணக்கானோரின்
மனங்களை மகிழ்வில் ஆழ்த்துகின்றது. பாராட்டுகளையும் பெறுகின்றது.