2010-04-16 16:21:10

போலந்து அரசுத்தலைவரின் அடக்கச்சடங்கில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் சொதானோ கலந்து கொள்கிறார்


ஏப்ரல்16,2010 கடந்த சனிக்கிழமை விமான விபத்தில் பலியான போலந்து அரசுத்தலைவர் Lech Kaczyński உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளின் அடக்கச்சடங்கில் கலந்து கொள்வதற்குத் தனது பிரதிநிதியாக கர்தினால் Angelo Sodano வை நியமித்துள்ளார் திருத்தந்தை.

கர்தினால்கள் குழுவின் தலைவராகிய முன்னாள் திருப்பீடச் செயலர் கர்தினால் சொதானோ, இச்சனிக்கிழமை போலந்தில் நடைபெறும் அவ்வடக்கச்சடங்கில் கலந்து கொள்வார். மேலும், இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி இடம் பெற்ற விமான விபத்தில் போலந்து அரசுத்தலைவர் Lech Kaczyński, அவரது மனைவி மரியா, பல உயர்மட்ட அதிகாரிகள் உட்பட 96 பேர் பலியாகினர். இதையொட்டி போலந்து நாடு ஒரு வாரமாக துக்கத்தை அனுசரித்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.