2010-04-15 15:24:32

முத்திபேறு பெற்றவர்களாய் அறிவிக்கும் சடங்குகள் குறித்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன


ஏப்ரல்15,2010 திருச்சபை ஏழு பேரை முத்திபேறு பெற்றவர்களாய் அறிவிக்கும் சடங்குகள் குறித்த தகவல்களை அண்மையில் வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
மூன்று ஸ்பானியர்கள், மூன்று இத்தாலியர்கள் ஒரு போலந்து நாட்டினர் என்று இந்த எழுவரில் இயேசு சபையைச் சார்ந்த இறையடியார் Bernardo Francisco de Hoyos ஏப்ரல் 18 இஞ்ஞாயிறன்று ஸ்பெயினில் உள்ள Valladolid நகரில் முத்திபேறுபெற்றவராக உயர்த்தப்படுவார்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25, ஞாயிறன்று ஸ்பெயின், இத்தாலி ஆகிய இரு நாடுகளில் இருவரும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெவ்வேறு நாட்களில் மற்ற நான்கு பேரும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று வத்திக்கானிலிருந்து வெளியான செய்திகள் கூறுகின்றன.உடல் நலம் குன்றியதால் கண் பார்வை இழந்து, அதன் பின் நோயுற்றோருக்கென "சீனாய்" (Sinai) என்ற பத்திரிகையை நடத்தி வந்த ஸ்பெயின் நாட்டவரான Lozano Garrido, போலந்தில் கம்யூனிச ரகசியப் படையினரால் கொல்லப்பட்ட அருட்தந்தை Jerzy Popieluszko, ஸ்பெயின் நாட்டில் கப்பூச்சின் அருட்சகோதரர் José Tous y Soler, மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை Angelo Paoli, அருட் சகோதரிகள் Teresa Manganiello, Maria Pierina De Micheli, ஆகிய அனைவரும் முத்திபேறு பெற்றவர்களாக அடுத்த சில மாதங்களில் உயர்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.