2010-04-15 15:25:08

தலித் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகள் சட்டம் மற்றும் நீதித் துறையின் அமைச்சரான வீரப்ப மொய்லியைச் சந்தித்தனர்


ஏப்ரல்15,2010 இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஒரு அங்கமாகிய தலித் கிறிஸ்தவர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய கிறிஸ்தவ சபைகளின் குழு ஆகியவற்றின் அங்கத்தினர்களும், இன்னும் பிற தலித் கிறிஸ்தவ தலைவர்களும் இப்புதனன்று பாபா சாஹேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித் துறையின் அமைச்சரான வீரப்ப மொய்லியைச் சந்தித்தனர்.
கிறிஸ்தவ தலித்களுக்குரிய உரிமைகளை வழங்கக் கோரி, ரங்கநாத் மிஸ்ராவின் குழு 2007ஆம் ஆண்டு மே மாதம் பிரதமருக்கு தங்கள் அறிக்கையைச் சமர்பித்து மூன்றாண்டுகள் கழிந்தும் இன்னும் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்காமல் இருப்பது வேதனையைத் தருகிறதென இந்தக் குழுவினர் வீரப்ப மொய்லியிடம் எடுத்துரைத்தனர்.
இந்தப் பிரச்சனை குறித்த முடிவை மத்திய அமைச்சரவையே எடுக்க முடியும் என்று சட்டம் நீதித் துறை அமைச்சர் இந்தக் குழுவினரிடம் தெரிவித்ததாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.மதம் என்ற அடிப்படையினால் உண்டாகும் வேறுபாடுகள் எதுவும் இல்லாமல், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அனைவருக்கும் ஒரே வகையில் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதே தாங்கள் அரசிடம் முன் வைக்கும் கோரிக்கை என்று இக்குழுவின் அங்கத்தினராய் அமைச்சரைச் சந்தித்த அருட்தந்தை Cosmon Arokiaraj கூறினார்.







All the contents on this site are copyrighted ©.