2010-04-15 15:25:27

சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கத்தோலிக்கர்களுக்கு அதிகம் பாதிப்புகள் இல்லை


ஏப்ரல்15,2010 சீனாவில் இப்புதனன்று நில நடுக்கம் ஏற்பட்ட Qinghai பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் அவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் இல்லை எனவும், அனைத்து கத்தோலிக்கர்களும் இணைந்து நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்கும் படியும் Xining மறைமாவட்ட குரு Vincent Qin Guoliang கூறினார்.
இப்புதன் காலை பள்ளிகளும் அலுவலகங்களும் செயல்பட ஆரம்பித்த நேரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள 85 விழுக்காடு கட்டிடங்கள் இடிந்து விட்டன. ஒரு தொழில் கல்வி பள்ளி முற்றிலும் இடிபட்டு, அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள பல மாணவர்கள் உட்பட இன்னும் பல்வேறு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் அதிகம் என்பதால், இந்தப் பகுதியில் இறந்தோர் மற்றும் காயமுற்றோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனர்கள், திபெத்தியர்கள் அனைவருக்காகவும் செபங்கள் எழுப்பபடுகின்றன என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கான வழிகளை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் செய்து வருகின்றனர் என்றும் செய்திகள் மேலும் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.