2010-04-15 15:25:39

கத்தோலிக்கர்கள் கலந்துகொண்ட பங்களாதேஷ் புத்தாண்டு கொண்டாட்டங்கள்


ஏப்ரல்15,2010 பங்களாதேஷின் கலாச்சாரத்தை உறுதிப் படுத்தவும், மேம்படுத்தவும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உதவியாக இருக்கின்றன என்று பங்களாதேஷ் கத்தோலிக்கர்கள் கூறினர்.
திருப்பலி, செபங்கள், மற்ற வைபவங்களுடன் இப்புதனன்று “Bangla Noboborsho” என்று வழங்கப்படும் புத்தாண்டைக் கொண்டாடிய கத்தோலிக்கர்கள், இந்த விழா வங்காளக் கலாச்சாரம், பாரம்பரியத்தை உறுதிப் படுத்தும் ஒரு விழா என்று கூறினர்.
பங்களாதேஷில் 125 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் புனித கிரகோரி உயர்நிலைப் பள்ளியில் கடந்த இரு ஆண்டுகளாய்க் கொண்டாடப்படும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் கத்தோலிக்கர்களுடன் பல முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர் என்று இந்த விழாக்குழுவின் செயலர் Shamim Hossain கூறினார்.பாரம்பரிய உடை, பாரம்பரிய உணவு ஆகிய அம்சங்களுடன் தங்கள் புத்தாண்டை இந்த மக்கள் கொண்டாடுகின்றனர் என்று பழங்குடியினரை அதிகம் கொண்ட கோபால்பூர் பங்கின் அருட்தந்தை Julian Rozario கூறினார்.







All the contents on this site are copyrighted ©.