2010-04-15 15:24:55

இந்தியாவில் தகவல் உரிமைச் சட்டத்தை நல் முறையில் பயன்படுத்தி ஏழைகளுக்கு உதவுங்கள் - தகவல்துறை தலைமை அதிகாரி


ஏப்ரல்15,2010 இந்தியாவில் நிலவும் தகவல் உரிமைச் சட்டத்தை நல் முறையில் பயன்படுத்தி ஏழைகளுக்கு உதவுங்கள் என்று தகவல்துறை தலைமை அதிகாரி திருச்சபை பணியாளர்களிடம் கூறினார்.
இச்செவ்வாயன்று குஜராத்தின் அகமதாபாதில் அம்மாநிலத்தைச் சார்ந்த 300க்கும் அதிகமான திருச்சபை பணியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் பேசிய தகவல்துறை தலைமை அதிகாரி Wajahat Habibullah இவ்வாறு கூறினார்.
2005ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள தகவல் உரிமைச் சட்டம் குறித்த தெளிவு ஐந்தாண்டுகள் கழித்தும் மக்களுக்கு இன்னும் சரிவரச் சென்று சேரவில்லை என்று கூறிய Habibullah, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தவும், பலப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட இந்த சட்டத்தை திருச்சபை பணியாளர்கள் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தினால், ஏழைகள் அதிகம் பயன் பெறுவர் என்று இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த இயேசு சபைக் குரு செட்ரிக் பிரகாஷ் கூறினார்.நற்செய்தியைப் பரப்புவது எப்படி ஒரு அருட்பணியாளரின் பணியோ, அதேபோல் இதுபோன்ற நல்ல சட்டங்களின் முழு உண்மைகளை, செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வது அனைத்துத் திருச்சபை பணியாளர்களின் கடமை என்று அகமதாபாத் ஆயர் Thomas Macwan கருத்தரங்கில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.