2010-04-13 15:49:14

இந்தியக்குருவின் குறும்படம் அமெரிக்காவில் இரு விருதுகளைப் பெற்றுள்ளது


ஏப்ரல்13,2010 ஆந்திர மாநிலத்தின் குரு பால சௌரி உடுமலா இயக்கிய ‘இறுதி விண்ணப்பம்’ என்ற குறும்படத்திற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இரு சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும், மெக்ஸிகோ சர்வதேச திரைப்பட விழாவிலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறத்தாழ 2000 குறும்படங்கள் பங்குபெற்றிருக்க, லாஸ் வேகாஸில் ஒரு விருதும் மெக்ஸிகோவின் Silver Palm விருதும் குரு உடுமலாவின் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.போலந்து கன்னியர் மடத்தில் எளிமையான வாழ்வு வாழ்ந்து இறை இரக்கத்தின் தூதுவராக செயல்பட்ட ஹெலன் கொவால்ஸ்கா என்ற கன்னியரின் வாழ்வை சித்தரிக்கும் ‘இறுதி விண்ணப்பம்’ என்ற பெயருடைய இப்படம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்டு, பல்வேறு இந்திய மொழிகளிலும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறும்படத்தின் இந்திப் பிரதியை மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸும் தெலுங்கு பிரதியை விஜயவாடா ஆயர் பிரகாஷ் மல்லவரப்பும் அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.