2010-04-12 15:08:54

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலை குறித்து தலத்திருச்சபை கவலை


ஏப்ரல்12,2010 பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவூட்டுவதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா.
பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 5ம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை எனவும், தினசரி கூலி வேலைக்கு என அவர்களை அனுப்புவதாகவும் கூறிய பாகிஸ்தான் ஆயர் பேரவைத்தலைவர், பயங்கரவாதத்தைப்போல் உணவு பாதுகாப்பற்ற நிலைகளும் நாட்டைப் பெருமளவில் அச்சுறுத்தி வருவதாகக் கூறினார்.மக்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல் இருக்க, விலைவாசிகளோ சில மடங்கு பெருகியுள்ளதாகக் கூறும் பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, வெளிநாடுகளின் உதவிகளும் கத்தோலிக்க அமைப்புகளுக்கு குறைந்துள்ளதால், பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் நிலைமை துன்பகரமானதாகவே உள்ளது எனக்கூறி கவலையை வெளியிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.